சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், ஏஆர் ரஹ்0மான் இசையமைப்பில், தனுஷ், கிரித்தி சனோன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்திப் படம் 'தேரே இஷ்க் மெய்ன்'. இப்படம் மொத்த வசூலாக 75 கோடியைப் பெற்றுதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிகர வசூல் 60 கோடியைக் கடந்துள்ளது. இந்த வாரத்திற்குள்ளாக 100 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் நடித்து கடைசியாக வெளிவந்த 'குபேரா, இட்லி கடை' ஆகிய தமிழ்ப் படங்கள் தமிழில் சரியாகப் போகவில்லை. தனுஷ் நடித்த ஹிந்திப் படங்களில் அவரது முதல் ஹிந்திப் படமான 'ராஞ்சனா' மட்டுமே 100 கோடி வசூலைக் கடந்தது. அடுத்து வந்த 'ஷமிதாப்' தோல்வியைத் தழுவியது. 'அத்ராங்கி ரே' ஓடிடியில் நேரடியாக வெளியானது.
10 வருட இடைவெளிக்குப் பிறகு தியேட்டர்களில் வெளியான ஹிந்திப் படமாக 'தேரே இஷ்க் மெய்ன்' படம் நல்ல வரவேற்பைப் பெற்று அவரது ஹிந்திப் பிரபலத்தை தக்க வைத்துள்ளது. தனுஷின் அடுத்த தமிழ்ப் படமாக எது ஆரம்பமாகும் என்பதில் ஒரு குழப்பம் நீடித்து வருகிறது.