நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இந்தியத் திரையுலகத்தில் ஒரு காலத்தில் மும்பை, கோல்கட்டா, சென்னை போன்றவைதான் திரைப்படத் தயாரிப்புகளுக்கான முக்கிய நகரங்களாக இருந்தன. அதன்பின் மொழிவாரியாக அந்தந்த மாநிலங்களில் திரைப்படத் துறை தனி வளர்ச்சி அடைந்தது.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் சென்னையை பின்னுக்குத் தள்ளி ஐதராபாத் முன்னேறியது. பல தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்போது தமிழ்ப் படங்களின் பூஜைகள் கூட சென்னையில் நடக்காமல் ஐதராபாத்தில் நடக்கும் அளவிற்குப் போய்விட்டது. இதை தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்கள், பிரபலங்கள் கூட கண்டு கொள்வதில்லை. சென்னை மீதான அவர்களது பாசம் எங்கே போனதென்று தெரியவில்லை.
இதனிடையே, பிரபல ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன், தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை டில்லியில் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது தெலுங்கானாவில் அனைத்து வசதிகளையும் கொண்ட மிகப்பெரிய ஸ்டுடியோ ஒன்றை நிர்மாணிக்கும் தனது ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், தெலுங்கானா மாநிலத்தில் திரைப்படத் துறையை வளர்ப்பதில் தனது அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்றும் சொல்லியிருக்கிறார்.
தமிழகத்தில் சென்னை அருகே பூந்தமல்லியில் அனைத்து வசதிகளையும் கொண்ட 500 கோடி ரூபாய் செலவில் திரைப்பட நகரம் ஒன்றை நிர்மாணிக்க கடந்த ஆண்டில் தமிழக அரசு அறிவித்தது. ஆனாலும், இங்குள்ள டாப் நடிகர்கள் யாருமே சென்னையில் திரைப்படத் துறையை வளர்க்க ஒரு ஸ்டுடியோவைக் கட்ட வேண்டும் என்ற ஆர்வத்தை வெளிப்படுத்தியதில்லை.