ஹிந்தியில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெறும் ஸ்ரீலீலா | விஜய் ஆண்டனியின் 'மார்கன்' ஜூன் 27ல் ரிலீஸ் | ரஜினி, கமலை இணைத்து படம் : முயற்சித்த லோகேஷ் | சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்ட கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் |
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியரான நடிகர் ஆதித்யா பஞ்சோலி மற்றும் நடிகை ஜரினா வஹாப் ஆகியோரின் மகனான சூரஜ் பாஞ்சோலி நடித்துள்ள படம் ‛கேசரி வீர்'. வரலாற்று பின்னணியில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது. மே 23ல் ரிலீஸாகிறது. பிரின்ஸ் திமான் இயக்கி உள்ளார். முக்கிய வேடங்களில் சுனில் ஷெட்டி, விவேக் ஓபராய், ஆகான்ஷா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சூரஜ் பஞ்சோலி அளித்த பேட்டி...
படத்தில் உங்க கேரக்டர் பற்றி சொல்லுங்க?
ஹமீர்ஜி கோஹில் என்ற வேடத்தில் மிகப் பெரிய போர்வீரனாக நடித்துள்ளேன். ஹமீர் தனது அன்புக்குரியவர்களுக்காகவும், தனது நாட்டிற்காகவும் போராடினார். அவரது படையில் 500 பேர் மட்டுமே இருந்தனர். இந்த சிறிய படை உடன் 5000-க்கும் மேற்பட்டவர்களும் நாட்டிற்காக போராடினர். அவரது சிலை குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலுக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது.
சுனில் ஷெட்டி உடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி சொல்லுங்க?
சுனில் உடன் பணிபுரிந்தது வேடிக்கையாக இருந்தது. ஒவ்வொரு நாளும் அவரிடம் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ளும்படி இருந்தது. அவரின் ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு உத்வேகம் அளித்தது. அவரிடம் சிகரெட், மதுபானம் போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆரோக்கியமாக உள்ளார்.
சாவா ஒரு வரலாற்று படமாக, வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் பற்றிய உங்களின் எதிர்பார்ப்பு என்ன?
சாவா நல்ல படம். பொதுவாக நல்ல படம் எப்போதும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறும். இந்த படத்திற்காக நாங்களும் கடுமையாக உழைத்துள்ளோம். எங்கள் படத்தை பார்ப்பார்களா இல்லையா என்பது இனி ரசிகர்கள் கையில் தான் உள்ளது. ஆனால் நாங்கள் ஒரு நல்ல படத்தை கொடுத்துள்ளோம் என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன்.
உங்கள் தந்தை ஆதித்யா பஞ்சோலியின் எந்த படம் உங்களுக்கு பிடிக்கும் அவரின் எந்த படத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்?
என் தந்தையின் நிறைய படங்கள் பிடிக்கும். என்றாலும் ஆதிஷ், சதி மற்றும் மகாசங்கராம் ஆகிய படங்களில் நடிக்க விரும்புகிறேன். அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பண்ணுவேன்.
இவ்வாறு தெரிவித்தார்.