ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

பாலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோகருக்கு 'பாடி டிஷ்மார்பியா' என்ற வினோத நோய் ஏற்பட்டுள்ளது. இது ஒரு மனிதனின் உடல் தோற்றத்தை வேறொரு தோற்றமாக மாற்றும் வினோத நோய்.
தற்போது உடல் மெலிந்து காணப்படும் கரண் ஜோகர் முகத்திலும் தோற்ற மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான அவரது புகைப்படங்களை பார்த்து இந்த நோய் அவருக்கு இருப்பது மற்றவர்களுக்கு தெரிய வந்தது. கரண் ஜோகரின் தோற்றத்தை பார்த்து பாலிவுட் திரை உலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கரண் ஜோகர் கூறி இருப்பதாவது: எனக்கு பாடி டிஸ்மோர்பியா என்கிற பிரச்னை இருக்கிறது. நம் உடம்பு நமக்கே பிடிக்காது. ஆடையில்லாமல் உடம்பை பார்க்க சுத்தமாக பிடிக்காது. என்னால் என்னையே கண்ணாடியில் பார்க்க முடியாது. இது அரிய வகை நோய். இது குறித்த கேள்விகளால் நான் டயர்டாகிவிட்டேன்.
அவர்களுக்கு என்னை பற்றிய உண்மை தெரியவில்லை. பல ஆண்டுகளாக எனக்கு இதய வீக்கம் தொடர்பான பிரச்னையும் இருக்கிறது. இந்நிலையில் தைராய்டு பாதிப்பு இருப்பது அண்மையில் தெரிய வந்தது. இந்த நோய்களுக்காக நான் கடைபிடிக்காத டயட்டே இல்லை. எல்லா ஒர்க்-அவுட்டும் செய்து பார்த்துவிட்டேன். ஆயிரம் விதமான டயட்டுகள், பல நூறு வகையான ஒர்க் அவுட்டும் செய்து பார்த்துவிட்டேன்.
இவ்வாறு கரண் ஜோகர் கூறியுள்ளார்.