லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
உலகின் மிகப்பெரிய திரைப்பட விழாவான 78வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. வருகிற 24ம் தேதி வரை நடக்கிறது. இந்த ஆண்டு விழாவிலும் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
பாலிவுட் நடிகைகளான ஐஸ்வர்யா ராய் பச்சன், அலியா பட், ஜான்வி கபூர் ஆகியோர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடக்கவிருக்கிறார்கள். அலியா பட் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் முதல் முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
கடந்த 2003ம் ஆண்டு கேன்ஸ் நடுவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார் ஐஸ்வர்யா ராய். கடந்தாண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் உயரிய கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற இயக்குநர் பயால் கபாடியா இந்த ஆண்டு விழாவில் ஜூரியாக பணியாற்ற இருக்கிறார்.
தொடக்க விழாவில் நடிகை ஊர்வசி ரவுட்டேலாதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்தார் ஊர்வசி. அவர் கையில் இருந்த கிளி வடிவிலான பர்ஸ் பலரையும் கவர்ந்தது. அந்த கிளி பர்ஸின் விலை 4 லட்சத்து 68 ஆயிரம் என்கிறார்கள்.
இந்த விழாவில் போட்டி பிரிவிலும், பொது பிரிவிலும் பல இந்திய படங்கள் திரையிடப்படுகிறது. மேலும் பல இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.