மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கடந்த 2002ல் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான கம்பெனி என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ஹிந்தியில் குறிப்பிடத்தக்க முன்னணி நடிகராக மாறினார். இதே கம்பெனி படத்தில் நடித்ததன் மூலம் தான் நடிகர் மோகன்லாலும் முதல் முறையாக பாலிவுட்டில் அடி எடுத்து வைத்தார். இதனை தொடர்ந்து 2019ல் பிரித்விராஜ் முதன்முறையாக இயக்குனராக மாறி லூசிபர் படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்க அதில் வில்லனாக நடித்திருந்தார் விவேக் ஓபராய். இந்த படம் தான் இவருக்கு மலையாள திரை உலகில் முதல் படமாக அமைந்தது.
முதல் பாகத்தில் இவரது கதாபாத்திரம் இறந்து விடுவதால், விரைவில் வெளியாக இருக்கும் இதன் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தில் இவருக்கு வேலை இல்லை. அதே சமயம் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விவேக் ஓபராய், லூசிபர் படத்தில் நடித்தது குறித்து கூறும்போது, “மோகன்லால் என்னை அழைத்து பாலிவுட்டில் நீங்கள் அறிமுகமான முதல் படத்தில் என்னுடன் இணைந்து நடித்தீர்கள். அதேபோல மலையாளத்திலும் என்னுடைய படத்தில்தான் நீங்கள் அறிமுகமாக வேண்டும். பிரித்விராஜ் இயக்குகின்ற இந்த படத்தில் உங்களுக்கு அற்புதமான கதாபாத்திரம் இருக்கிறது என்று எனக்கு ஒரு அன்புக்கட்டளையே போட்டுவிட்டார். அதை என்னால் மீற முடியவில்லை..
ஆனால் அந்த படம் வெளியான பிறகு தற்போது பல ஊர்களுக்கு செல்லும்போதும் என்னை அந்த படத்தில் நடித்த பேபி கதாபாத்திரத்தின் பெயரை சொல்லி தான் அழைக்கிறார்கள். அப்படி அழைப்பவர்கள் மலையாளிகள் என்பதை புரிந்து கொண்டு, உடனே அவர்களிடம் எந்தா சுகந்தன்னே என்று மலையாளத்தில் கேட்டு சந்தோஷப்பட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.