துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
பிரயாக்ராஜ் : பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி, மகா கும்பமேளாவில் துறவறம் பூண்டார். இனி அவர், மாய் மம்தா நந்த் கிரி என்ற பெயரில் அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் மம்தா குல்கர்னி, 50. இவர், தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய 'நண்பர்கள்' படத்தில் நாயகியாக நடித்தவர். சினிமாவில் படிப்படியாக விலகிய இவர், கடந்த 2012ம் ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் கலந்து கொண்டார். ஆன்மிகத்தின் மீது எழுந்த ஈடுபாடு காரணமாக, காவி உடைகளை அணியத் தொடங்கினார்.
25 வருடங்களுக்குப் பிறகு இந்தியா வந்த அவர் பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவிற்கும் சென்று முழுமையான துறவறம் மேற்கொள்வதாகவும் பதிவிட்டிருந்தார். இதன்படி அவர் நேற்று (ஜன.24) மகா கும்பமேளாவின் கின்னர் அகாடாவிற்கு வந்தார். அங்கு, அதன் தலைவரான ஆச்சார்யா லஷ்மி நாராயண் திரிபாதியை சந்தித்து பேசினார். அப்போது, தமக்கு மகா மண்டலேஷ்வர் பதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்த மம்தா குல்கர்னி, இதற்காக முழு துறவறம் பூண்ட தயாராக இருப்பதாகக் கூறினார்.
இவரது கோரிக்கையை ஏற்ற பிறகு முறையான சடங்குகளை செய்து, மம்தா குல்கர்ஜி முழு துறவறம் பூண்டார். அவருக்கு ஷியாமாய் மம்தாணந்த் கிரி எனப் புதிய பெயரிடப்பட்டது. இதையடுத்து, திரிவேணி சங்கமத்தில் நீரடிய அவருக்கு மகா மண்டலேஷ்வர் பதவி வழங்கப்பட்டது.