வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
கடந்த 15ம் தேதி வெளியான ஹிந்திப் படம் 'தி சபர்மதி ரிப்போர்ட்'. நீரஜ் சர்மா இயக்கி உள்ள இந்த படத்தில் விக்ராந்த் மாஸே, ராஷி கண்ணா, ரிதி துர்கா, பர்கத் சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏக்தா கபூர், ஷோபனா கபூர் தயாரித்துள்னர். இந்த படம் குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகி உள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு, அயோத்தியில் இருந்து சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ராம பக்தர்கள் சிலர் குஜராத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் ஒரு கும்பல் ரயில் பெட்டிக்கு தீவைத்ததில் 50க்கு மேற்பட்ட ராம பக்தர்கள் பலியானார்கள். குஜராத் கலவரத்துக்கு இச்சம்பவம் வித்திட்டது. அப்போது, நரேந்திர மோடி, குஜராத் மாநில முதல்வராக இருந்தார். இந்த கலவரத்திற்கு மோடியே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.
தற்போது இந்த படம் ரயில் எரிப்பு சம்பவம் மற்றும் கலவரம் குறித்து வேறு கோணத்தில் காட்டுகிறது. இந்த படத்தை பாராட்டி பலரும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவரின் பதிவை டேக் செய்து பிரதமர் நரேந்திரமோடி தனது எக்ஸ் தளத்தில் “சரியாக சொன்னீர்கள். உண்மை வெளிவந்தது நல்ல விஷயம். அதுவும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வந்துள்ளது. பொய்க்கதை குறுகிய காலம்தான் நீடிக்கும். கடைசியாக உண்மை வெளிவந்தே தீரும்” என்று எழுதியுள்ளார்.