ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மேற்கு வங்க மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒரு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக ஹிந்தி நடிகை ஆலியா பட் வெளியிட்ட பதிவில், ‛‛மீண்டும் ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமை. பெண்கள் பாதுகாப்பாக இல்லை. 2022 முதல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகி உள்ளது. மருத்துவ துறையிலேயே இப்படி நடப்பது பயமாக உள்ளது. ஒரு நாளைக்கு 90 பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்களின் பாதுகாப்பு சுமையாகி உள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்கள் பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள், பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள். தற்போதைய சூழலில் ஏதோ ஒரு பெரிய தவறு இருக்கிறது என நினைக்கிறேன். அதன் மூலகாரணத்தை கண்டறிந்து அதை சரி செய்யும் வரை இங்கு எதுவும் மாறாது'' என்கிறார்.