ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் | 'தி ராஜா சாப்' போட்டியை சமாளிக்குமா 'ஜனநாயகன்' |
சுவிட்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் ஆண்டுதோறும் 'லோகார்னோ திரைப்பட விழா' நடைபெறும். அந்த வகையில் 77-வது திரைப்பட விழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இத்திரைப்பட விழாவின் மிக உயரிய விருதான வாழ்நாள் சாதனையாளர் விருதை பாலிவுட் நடிகர் ஷாரூக்கானுக்கு வழங்கி கௌரவித்துள்ளனர்.
அதன் பின்னர் இந்நிகழ்வில் உரையாடிய ஷாரூக்கான் கூறுகையில், “இந்தியா பரந்து விரிந்த பல மொழிகளைக் கொண்ட நாடு. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, பெங்காலி என பல மொழிகள் உள்ளன. அவையெல்லாம் சேர்ந்தது தான் இந்திய சினிமா. இந்தியாவில் சிறந்த கதை சொல்லும் பகுதிகளாக நான் தென்னிந்தியாவை கருதுகிறேன். அவர்களிடம் நல்ல கதைகள் உள்ளன.
மலையாள சினிமா, தெலுங்கு சினிமா, தமிழ் சினிமாவில் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார்கள் இருப்பது நாம் எல்லோரும் தெரியும். சமீபத்தில் வெளிவந்த 'ஜவான்', 'ஆர்ஆர்ஆர்', 'பாகுபலி' உள்ளிட்ட படங்களின் வெற்றி அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. உண்மையில் திரைப்படங்களாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் தென்னிந்திய சினிமா மிக மிக அற்புதமானது. இயக்குனர் மணிரத்னத்துடன் 'தில் சே' படத்தில் பணியாற்றிய பிறகு தென்னிந்திய இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. அவர்களிடம் வித்தியாசமான கதை சொல்லல் முறை உள்ளது” என்றார்.