லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் நவாசுதீன் சித்திக். தமிழில் 'பேட்ட' படத்திலும் நடித்திருக்கிறார். இவரது மனைவி ஆலியா சித்திக். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆலியா கணவரை பிரிந்து தனது குழந்தைகளுடன் துபாயில் வசித்து வருகிறார்.
கடந்த 2020ம் ஆண்டு ஆலியா தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து குழந்தைகளை தனது கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி நவாசுதின் சித்திக் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் இருவரையும் சமரசமாகச் செல்லும்படி கேட்டுக்கொண்டது. இந்த நிலையில் தற்போது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நவாசுதீனுடன் சேர்ந்து வாழ ஆலியா முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து ஆலியா கூறும்போது "எங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மூன்றாம் நபர்கள்தான் காரணம் என்று நினைக்கிறேன். தவறான புரிதல்கள் எங்கள் வாழ்வில் தற்போது இல்லை. எங்கள் குழந்தைகளுக்காக நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளோம். இருவருக்கும் இடையில் கெட்ட நினைவுகள் இருந்தாலும் சில அழகிய அன்பான தருணங்களும் இருக்கின்றன. நாங்கள் அந்த இனிமையான தருணங்களையே எடுத்துக்கொண்டு திருமண வாழ்க்கையைத் தொடர முடிவு செய்திருக்கிறோம்" என்கிறார்.
சமரசத்திற்கு பிறகு நவாசுதீனும், ஆலியாவும் தங்களது 14வது திருமண நாளை துபாயில் கொண்டாடி உள்ளனர். அந்த படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.