மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
புதுடில்லி : பா.ஜ.,வின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பிரபல நடிகை கங்கனா ரணாவத் குறித்து, காங்.,கின் பெண் செய்தித் தொடர்பாளர் சமூக வலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், பா.ஜ., சார்பில் ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில், லோக்சபா தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இது குறித்து, காங்., செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாதே சமூக வலைதளத்தில், ஆபாசமான கருத்தை தெரிவித்திருந்தார். ஆனால், சிறிது நேரத்தில் அது நீக்கப்பட்டுள்ளது. தன் சமூகவலைதள கணக்கை பயன்படுத்தி, யாரோ தவறான இந்தப் பதிவை வெளியிட்டதாக அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்து, கங்கனா வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுஉள்ளதாவது : கடந்த 20 ஆண்டுகளில், நான் பலதரப்பட்ட பெண்களை சித்தரிக்கும் வேடங்களில் நடித்துள்ளேன். நம் மகள்களை நாம் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் கும்பல்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். பெண்களின் உடல் பாகங்களில் மட்டுமே காட்டப்படும் ஆர்வங்களில் இருந்து விடுபட வேண்டும். ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்ணியம் உள்ளது. அதை நாம் மதிக்க வேண்டும் என்பதை உணர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கு பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளனர். 'கங்கனா குறித்த பதிவை நீக்கியிருந்தாலும், காங்கிரசின் குறுகிய நோக்கம், பெண்களுக்கு எதிரான மனப்பான்மை வெளிபட்டுள்ளது' என, அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் ரேகா சர்மாவும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுத உள்ளதாக அவர் கூறியுள்ளார்.