தெலுங்கில் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆரின் திரையுலக பயணம் ஆர்ஆர்ஆர் படத்திற்கு முன்பு, அதற்கு பின்பு என சொல்லும் விதமாக மிகப்பெரிய அளவில் மாறி உள்ளது. குறிப்பாக பாலிவுட் வரை மிகப் பெரிய அளவில் தேடப்படும் நடிகராக மாறிவிட்டார். இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் 2019ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் 'வார்'. ஷாரூக்கானின் பதான் மற்றும் சமீபத்தில் வெளியான பைட்டர் ஆகிய படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் தான் இந்த படத்தை இயக்கினார். அடுத்ததாக வார் படத்தின் இரண்டாம் பாகம் வார்-2 என்கிற பெயரில் தயாராக இருக்கிறது.
இதில் ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறாராம் ஜூனியர் என்டிஆர். இந்த படத்திற்குப் பிறகு அவரது திரையுலக பயணத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் பாலிவுட்டிலும் அவர் வரவேற்பை பெறுவார் என்றும் சொல்லப்படுகிறது.