மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

டில்லியை சேர்ந்த தொழிலதிபரிடம் 200 கோடி மோசடி, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் உள்ளிட்ட பல வழக்குகளில் பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த மோசடியில் கிடைத்த பணத்தில் சுகேஷின் காதலியும், பாலிவுட் நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கு 10 கோடி வரை கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வந்த நிலையில், சிறைக்குள் இருந்து கொண்டே ஜாக்குலினுக்கு அவ்வப்போது சுகேஷ் காதல் கடிதங்களை எழுதி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். ஜாக்குலினும் “நான் அவரோடு நெருக்கமாக இருந்தது உண்மைதான். அவர் மோசடி பேர்வழி என்பது தெரியாது. அவரிடம் பரிசு பொருட்கள்தான் வாங்கி இருக்கிறேன் பணம் வாங்கவில்லை” என்று கூறி வந்தார்.
இந்த நிலையில் டில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவுக்கு ஜாக்குலின் ஒரு புகார் மெயில் அனுப்பி உள்ளார். அதில், “சிறையில் இருந்து கொண்டே சுகேஷ் என்னை மிரட்டுகிறார். கோர்ட்டில் உண்மையை சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். இதனால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. வெளிப்படையாக என்னை மிரட்டும் சுகேஷூக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். அதோடு அவர் எழுதும் கடிதங்கள், எனது தனிப்பட்ட உரிமைகளை பாதிக்கிறது. அதையும் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.