சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

முன்னணி நடிகர், நடிகைகளின் பெயரில் போலியாக எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் கணக்குள் தொடங்கி, சினிமா வாய்ப்பு தருகிறோம். என்னை நீங்கள் சந்திக்கலாம். நான் நடத்தும் அறக்கட்டளைக்கு உதவுங்கள் என்கிற ரீதியில் பதிவுகள் வெளியிட்டு பல மோசடிகள் நடந்து வருகிறது. இதுபற்றி அறியாத அப்பாவி மக்கள் தங்கள் மனம் கவர்ந்த நடிகர், நடிகை பணம் கேட்கிறாரே என்று பணத்தை அனுப்பி விடுகிறார்கள்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகை வித்யா பாலனின் பெயரை பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து வித்யா பாலன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் “எனது பெயரில் மர்ம நபர் வாட்ஸ் ஆப் மூலம் செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். வாட்ஸ் ஆப்பில் எனது புகைப்படத்தை டி.பி.யில் வைத்துக்கொண்டு நான்தான் வித்யாபாலன் என்று கூறி மோசடி வேலையில் ஈடுபட்டு வருவதாக எனக்கு தெரிய வந்துள்ளது. எனவே அது போன்ற நபர்களிடமிருந்து அழைப்பு அல்லது மெசேஜ் வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம்'' என்று பதிவிட்டுள்ளார்.