பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பிரபல பாலிவுட் நடிகர் கபீர் பேடி கிட்டத்தட்ட 50 வருடங்களாக தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்து வருகிறார். 1983லேயே ரோஜர் மூர் நடித்த ஜேம்ஸ்பாண்ட் படமான ஆக்ட்பஸ்சி என்கிற படத்தில் நடித்தவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்த அனார்கலி படத்தில் ஒரு கண்டிப்பான ராணுவ அதிகாரியாக விளான் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் படத்தில் கூட காஷ்யப் முனிவராக நடித்திருந்தார் கபீர் பேடி. இது மட்டுமல்ல ஒரு காலகட்டத்தில் பல ஆங்கில விளம்பர படங்களிலும் இவரது குரல் கம்பீரமாக ஒலித்தது.
இந்த நிலையில் இத்தாலியின் உயரிய விருதான 'ஆபீசர் ஆப் ஆர்டர் ஆப் மெரிட்' என்கிற விருதை கபீர் பேடிக்கு வழங்கி கவுரவித்துள்ளது இத்தாலி அரசாங்கம். சமீபத்தில் மும்பையில் உள்ள கேட்வே ஆப் இந்தியா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவருக்கான இந்த விருதை இத்தாலிய அரசு சார்பாக அதிகாரிகள் வழங்கினார். இந்த விருதுக்கான சான்றிதழில் இத்தாலிய அதிபரும், இத்தாலிய பிரதமரும் கையொப்பமிட்டு உள்ளனர்.
இந்த விருது பெற்றது குறித்து கபீர் பேடி கூறும்போது, “இத்தாலிய அரசின் உயரிய விருதான ஆர்டர் ஆப் மெரிட் என்கிற விருதைப் பெற்றுள்ளதன் மூலம் இத்தாலியில் வாழ்ந்த என்னுடைய வாழ்க்கை முழுமை அடைந்ததாக நினைக்கிறேன். 12 வருடங்களுக்கு முன்பு படை வீரன் என்கிற விருது கொடுத்து கவுரவித்தனர். தற்போது அதைவிட உயரிய விருது கொடுத்து கவுரவப்படுத்தியுள்ளனர்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.