ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாலிவுட் நடிகை பூனம் பாண்டே, அடல்ட் படங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர். ஏற்கனவே 2011ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது, அந்த போட்டியில் இந்தியா உலக கோப்பையை வென்றால் அதே மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று பதிவிட்டு அப்போது ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் பூனம் பாண்டே. ஆனால் 2011 ஆம் ஆண்டு இந்தியா உலக கோப்பையை வென்ற போதும், மைதானத்தில் ஆடை இன்றி அவர் ஓடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி நடைபெற்று வரும் நிலையில், அவர் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ரசிகர்களின் விருப்பத்திற்காக ப்ளூ ஜெர்சி டி-ஷர்ட் அணிந்திருக்கிறேன். இன்று இந்திய அணி உலக கோப்பையை வென்றால் ரசிகர்களுக்கு நிச்சயம் சூப்பரான ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று குறிப்பிட்டு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார் பூனம் பாண்டே.