ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகைகள் அரசியலுக்கு வருவது புதிது அல்ல. ஷபனா ஆஷ்மி, ஹேமமாலினி, ஜெயப்ரதா என நிறைய இருக்கிறார்கள். இந்த நிலையில் ஹிந்தி நடிகை மாதுரி தீட்சித் அரசியலுக்கு வர இருப்பாகவும், வருகிற பார்லிமென்ட் தேர்தலில் அவர் போட்டியிடப்போவதாகவும் தகவல் வெளியானது. மும்பை, வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இந்தியா - நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியில் மாதுரியும் அவரது கணவர் ஸ்ரீராம் நேனேயும், மாநில பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலருடன் கலந்து கொண்டனர். இதற்கு பிறகு இந்த தகவல்கள் வேகமாக பரவ ஆரம்பித்தது.
ஆனால் இதனை மாதுரி மறுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது “நான் அரசியலில் நுழைய இருக்கிறேன் எனத் தகவல் வந்து கொண்டிருப்பது குறித்து நான் அறிவேன். ஆனால், அவை எல்லாம் வெறும் வதந்திதான். நான் எந்தக் கட்சியிலும் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போவதில்லை” எனக் கூறியுள்ளார் மாதுரி.