ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் |
சமீபத்தில் பாலிவுட்டில் கடார் 2 என்கிற படம் வெளியானது. சன்னி தியோல், அமிஷா படேல் நடித்திருந்த இந்த படத்தை அனில் சர்மா என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று தற்போது 500 கோடிக்கும் அதிகமான வசூலை கடந்துள்ளது. இத்தனைக்கும் இந்த படத்துடன் அக்ஷய் குமாரின் ஓஎம்ஜி 2, ரஜினிகாந்த்தின் ஜெயிலர் உள்ளிட்ட படங்கள் வெளியானாலும் இந்த படம் அந்த போட்டியிலும் எதிர்நீச்சல் போட்டு அபரிமிதமாக வசூலித்துள்ளது.
இந்த நிலையில் கடார் 2 படக்குழுவினர் இந்த படத்தின் சக்சஸ் பார்ட்டியை வெகு விமர்சையாக கொண்டாடினர். இதில் பாலிவுட்டில் உள்ள பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக ரொம்பவே அரிதாக பாலிவுட்டின் மும்மூர்த்திகளான ஷாரூக்கான், சல்மான்கான், அமீர்கான் ஆகிய மூவருமே இந்த சக்சஸ் பார்ட்டியில் நீண்ட நாளைக்கு பிறகு ஒன்றாக கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.