ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛ஜவான்'. நாயகியாக நயன்தாரா, வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர். இவர்களுடன் பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சென்னையில் நடந்த இப்பட விழாவில் பேசிய ஷாரூக்கான், ‛‛தமிழ் சினிமாவில் இதற்கு முன் மணிரத்னம், சந்தோஷ் சிவன் ஆகியோரை மட்டுமே எனக்கு தெரியும். இந்த படம் மூலம் ஏராளமான தென்னிந்திய கலைஞர்களின் நட்பு கிடைத்துள்ளது. தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமா மூலம் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன்,'' என்கிறார்.
டிரைலர் வெளியீடு
இந்த படத்தின் டிரைலர் இன்று(ஆக., 31) ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தனித்தனியாக வெளியிடப்பட்டது. டிரைலர் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆக்ஷனில் தூள் கிளப்பி உள்ளார் ஷாரூக். அவருடன் நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி ஆகியோரும் கவனம் ஈர்த்துள்ளனர். டிரைலர் விதவிதமான தோற்றங்களில் ஷாரூக் வருகிறார். அதோடு இதில் மூன்று வேடங்களில் அவர் நடித்திருக்கிறார் என தெரிகிறது. டிரெண்டிங்கில் இந்த டிரைலர் இடம் பிடித்துள்ளது.