நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
வேகமாக வளர்ந்து வந்த இளம் பாலிவுட் நடிகர் ஆதித்யா சிங். ஆதிகிங், மாம் அண்ட் டாட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார், தொலைக் காட்சி தொடர்களில் நடித்து வந்தார். 33 வயதான ஆதித்யா சிங் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 11வது மாடியில் வசித்து வந்தார். நேற்று மதியம் அவரை தேடி நண்பர் ஒருவர் அவரது வீட்டுக்கு சென்றார். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நண்பர் வெகுநேரமாக தட்டியும் யாரும் கதவை திறக்கவில்லை. எனவே அவர் மாற்று சாவி மூலம் வீட்டை திறந்து உள்ளே சென்றார்.
அப்போது குளியல் அறையில் ஆதித்யா சிங் மயங்கி கிடந்தார் . உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். அதித்யா சிங் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தாகவும அதன் காரணமாக அவர் மரணம் அடைந்தாகவும் கூறப்படுகிறது. திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.