வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
ஹிந்தி, தெலுங்கு, தமிழ், ஹாலிவுட் ஆகிய மொழி படங்களில் நடித்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "ஹிந்தி சினிமா மாபியாக்கள் கையில் உள்ளது. அவர்கள் என்னை ஓரம் கட்டினர் என்றும், அந்த அரசியலை தாக்குப்பிடிக்க முடியாமல் தான் நான் ஹாலிவுட்டுக்கு சென்றுவிட்டேன்'' என்றும் கருத்து தெரிவித்தார். இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இத்தனை நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது எதற்காக பிரியங்கா சோப்ரா இவ்வாறு பேசினார் என இணையதள வாசிகள் கேள்விகள் எழுப்பினர்.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக பிரியங்கா சோப்ரா கூறியது, "ஒரு நிகழ்ச்சியில் எனது சினிமா வாழ்க்கை பயணம் பற்றி கேட்டனர். இதனால் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் வெளிப்படையாக தெரிவித்தேன். ஹிந்தி பட உலக மாபியா கும்பல் பற்றிய உண்மையை சொன்னேன். நான் எதிர்கொண்ட அந்த வலிகளை பற்றி பேச எனக்கு இப்போதுதான் தைரியம் வந்துள்ளது. நான் அனுபவித்த கஷ்டங்களை தைரியமாக இந்த உலகிற்கு சொல்கிற நிலையில் இன்று நான் இருக்கிறேன்'' என கூறியுள்ளார்.