ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாலிவுட் குணசித்ர நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி. ஹிந்தி மற்றும் மராட்டிய படங்களில் அம்மா உள்ளிட்ட குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். 2001ம் ஆண்டு வங்க மொழியில் வெளியான 'ஹேமந்தர் பகி' என்ற படம் மூலம் அறிமுகமானார். 'காலா' என்ற படம் மூலம் ஹிந்திக்கு வந்தார். 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது 'ஷிபுர்' என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் சந்தீப் சர்கார் மீது 42 வயதான ஸ்வஸ்திகா முகர்ஜி பாலியல் புகார் கொடுத்துள்ளார். கோல்கட்டாவில் உள்ள கோல்ப் கிரீன் காவல் நிலையத்தில் அவர் அளித்துள்ள புகார் மனுவில். “தயாரிப்பாளர் சந்தீப் சர்க்கார், ஹிந்தி ஹீரோயின்களே எந்த பிரச்சினையும் செய்யாமல் என் ஆசைக்கு உடன்படுகிறார்கள். இந்த படத்தில் உனக்கு வாய்ப்பு கொடுத்து நிறைய சம்பளம் கொடுத்தது நான்தான். எனவே என்ஆசைக்கு உடன்படவில்லை என்றால் மார்பிங் செய்த உனது நிர்வாண புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.