ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் வீட்டை இரண்டு புகைப்பட கலைஞர்கள் அருகில் உள்ள வீட்டில் இருந்து ரகசியமாக படம் எடுத்துள்ளனர். இதை ஆலியா பட் கவனித்து விட்டார். பின்னர் அவர்கள் எடுத்த படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள அவர் இதுகுறித்து எழுதியிருப்பதாவது:
எனது வீட்டின் அறையில் நான் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். யாரோ என்னை பார்ப்பதை உணர்ந்தேன். அப்போது, எதிர் வீட்டின் மேல்மாடியை பார்த்த போது, அங்கு நின்றிருந்த இரண்டு நபர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இதுபோன்ற செயல்களால் எனது தனி உரிமை பாதிக்கப்படுகிறது.
எந்த உலகில் இதுபோன்ற செயல்கள் அனுமதிக்கப்படுகிறது. ஒருவரின் தனியுரிமை மீதான அத்துமீறல்கள் அதன் எல்லைக் கோடுகளை கடந்துவிட்டன. என எழுதியிருந்தார். அதோடு இந்த பதிவை மும்பை போலீசுக்கு டேக் செய்திருந்தார்.
ஆலியாவின் இந்த பதிவு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலரும் ஆலியாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டு வருகிறார்கள். அனுஷ்கா சர்மா, நீது கபூர், ஜான்வி கபூர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் ஆலியாவுக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.