'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
2022ம் ஆண்டில் பாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் மோசமான தோல்வியைத் தழுவியுள்ளன. தென்னிந்தியப் படங்களின் தாக்கம் பாலிவுட்டில் அதிகம் எதிரொலித்துள்ளதாகக் கருதுகிறார்கள். முன்னணி நடிகர்களின் படங்கள் கூட 50 கோடி வசூலுக்கே தத்தளிக்கும் நிலைமை ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே 'பாய்காட் பிரம்மாஸ்திரா' என்ற டிரெண்டிங் டுவிட்டர் தளத்தில் பரபரப்பாக உள்ளது. பாலிவுட்டில் அடுத்து அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ள அந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மவுனி ராய், நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
அடுத்த வாரம் செப்டம்பர் 9ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் கரண் ஜோஹர் ஒருவர். அவர், ரண்பீர் கபூர், ஆலியா பட் ஆகியோர் சுஷாந்த் சிங் தற்கொலை நிகழ்விலிருந்தே 'நெப்போட்டிசம்' சர்ச்சையில் சிக்கியவர்கள். கரண் ஒரு தயாரிப்பாளராக இருந்த 'லைகர்' படம் 'பாய்காட்' எதிர்ப்பு அலையில் சிக்கி சின்னா பின்னமானது. அந்தப் படத்தின் கதாநாயகனாக விஜய் தேவரகொண்டா சுயமாக முன்னேறியவர். அவருடைய படத்திற்கே அந்த கதி என்றால், 'நெப்போட்டிசம்' சர்ச்சையில் சிக்கிய கரண், ரண்பீர், ஆலியா ஆகியோர் இணைந்துள்ள 'பிரம்மாஸ்திரா' படம் எப்படி தப்பிக்கப் போகிறது என பாலிவுட்டில் கவலையுடன் உள்ளார்கள்.
சமீபத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் 'என்னைப் பிடிக்கவில்லை என்றால், என் படத்தைப் பார்க்காதீர்கள்,” என ஆலியா பட் அளித்த பேட்டி காரணமாக இன்று '#आलिया_My_Foot” என ரசிகர்கள் கோபத்துடன் விமர்சித்து டிரெண்ட் செய்து வருகிறார்கள்.