ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தெலுங்கில் வெளியாகி பாலிவுட்டுக்கு செல்லும் படமாகட்டும், பாலிவுட்டில் வெளியாகி தென்னிந்தியாவில் வெளியாகும் படமாகட்டும், இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியை சிறப்பு விருந்தினராக அழைப்பது என்பதை ஒரு வழக்கமாகவே ஆக்கிவிட்டார்கள். அவரும் மற்றவர்களின் மனம் கோணாமல் அவர்களது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் ரன்பீர் கபூர், நாகார்ஜுனா, அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரா திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாக இருக்கிறது.
விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தை புரமோட் பண்ணுவதற்காக சென்னைக்கு வந்த ரன்பீர் கபூர் நாகார்ஜுனா ஆகியோருடன் இயக்குனர் ராஜமவுலியும் கலந்து கொண்டார். அதுமட்டுமல்ல சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இந்த மூவருக்கும் தலைவாழை இலையில் தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. வடநாட்டை சேர்ந்த ரன்பீர் கபூர் நம் உணவு வகைகளை ரொம்பவே ரசித்து சாப்பிட்டாராம்.