ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஆனந்திதா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நவாசுதீன் சித்திக் நடிக்கும் பாலிவுட் படம் 'ஹட்டி'. இப்படத்தை அக்ஷத் அக்சத், அஜய் சர்மா இயக்குகிறார்கள். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் நவாசுதீன் சித்திக் பெண் வேடத்தில் இருக்கிறார். இந்த படத்தில் அவர் பெண் தாதாவாக நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவரது தோற்றம் வைரலாக பரவி வருகிறது.
இந்த தோற்றத்தை வெளியிட்டு நவாசுதீன் சித்திக் கூறியிருப்பதாவது: நான் வித்தியாசமான சுவாரஸ்யமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் ஹட்டி ஒரு தனித்துவமான மற்றும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்க போகிறது. ஏனெனில் நான் இதுவரை பார்த்திராத தோற்றத்தில் நடிக்கிறேன். ஒரு நடிகனாக இதில் வெற்றி பெற எனக்கு உதவுங்கள். என்று கூறியிருக்கிறார்.