மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், விஜய் சேதுபதி, மாதவன், கதிர், ஷ்ரத்தா ஸ்ரீ நாத், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலரது நடிப்பில் 2017ம் ஆண்டு தமிழில் வெளிவந்த படம் 'விக்ரம் வேதா'. விமர்சகர்கள், ரசிகர்கள் வரவேற்பைப் பெற்று தரமான ஒரு திரைப்படமாக தமிழ் சினிமாவில் அமைந்த ஒரு படம்.
அப்படத்தை புஷ்கர் காயத்ரி இயக்க, ஹிந்தியில் அதே பெயரில் ரீமேக் செய்துள்ளனர். மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளனர். அதன் டீசர் இன்று காலை வெளியானது. சில மணி நேரங்களிலேயே 45 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
டீசரைப் பார்க்கும் போது தமிழில் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்ததோ அதே போல ஹிந்தியிலும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் வேதா கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து பெரும் பாராட்டுக்களைப் பெற்றார். அது போலவே ஹிந்தியிலும் ஹிருத்திக் ரோஷன் பெறுவார் என டீசரைப் பார்க்கும் போது தெரிகிறது. தாடி, மீசையுடன் ஹிருத்திக்கைப் பார்ப்பதற்கே வித்தியாசமாக உள்ளது. தமிழில் விக்ரம் கதாபாத்திரத்தில் மாதவனும் மிரட்டியிருப்பார். அவருக்கும் விஜய் சேதுபதிக்குமான ஏட்டிக்குப் போட்டி நடிப்பு பரபரப்பாக அமைந்தது.
ஹிந்தியில் ஹிருத்திற்கு அந்த அளவுற்கு சைப் அலிகான் போட்டியை ஏற்படுத்தியிருப்பாரா என்பது டீசரைப் பார்க்கும் போது சந்தேகமாக உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் வரை உள்ள டீசரில் ஹிருத்திக், சைப் காட்சிகள் மட்டுமே உள்ளது. சைப் மனைவியாக நடிக்கும் ராதிகா ஆப்தே சில வினாடிகள் மட்டுமே வந்து போகிறார். டீசரின் முடிவில் தமிழில் இருந்த அதே தீம் மியூசிக்கைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஹிந்தியில் சாம் சிஎஸ் தான் பின்னணி இசையமைக்கிறார். பாடல்களுக்கு விஷால் சேகர் இசையமைக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் இப்படத்திற்கு எதிராக அடிக்கடி டிரென்டிங் செய்து வருகிறார்கள். அவற்றை மீறி, செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ள இப்படம் ஹிந்தியில் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
டீசரை காண அருகில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் : https://www.youtube.com/watch?v=nf51aIeEWa0