ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
டாப்ஸி நடித்துள்ள இந்திப் படம் துபாரா. இந்த படத்தை அனுராக் காஷ்யப் இயக்கி உள்ளார். வருகிற 19ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடந்து வருகிறது. இதில் டாப்ஸி கலந்து கொண்டு வருகிறார்.
மும்பையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு டாப்ஸி தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அங்குள்ள போட்டோகிராபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த டாப்ஸி "எனக்கு சொல்லப்பட்ட நேரத்திற்கு நான் வந்திருக்கிறேன். நான் தாமதாக வந்ததாக எப்படி நீங்கள் கூறலாம்" என்றார். இதனை டாப்ஸி கோபகமாகவும் பேசினார்.
இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு டாப்ஸியும் கோபமாக பதிளித்தார். சில நிமிடங்கள் கடும் வாக்குவாதம் நடந்தது. பின்னர் பேசிய டாப்ஸி "நான் கேமரா முன்னால் நிற்கிறேன். இதுதான் நாளை வெளியில் வரும், கேமராவுக்கு பின்னால் நிற்கும் உங்கள் செயல்பாடு வெளியில் வராது. நீங்களும் கேமராவுக்கு முன்னால் வந்து பேசுங்கள்" என்றார்.
இதற்கிடையில் விழா ஏற்பாட்டாளர்கள் இரு தரப்பையும் சமாதானம் செய்து வைத்தனர்.