மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஒப்பந்த அடிப்படையில் ராணுவ வீரர்களாக பணியாற்றும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. இந்த திட்டத்தை எதிர்த்து வட மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. திட்டத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்த திட்டம் ஆழமான அர்த்தம் கொண்டது என்று நடிகை கங்கனா ரணவத் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ‛‛இஸ்ரேல் போன்ற பல நாடுகள் தங்கள் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சியை கட்டாயமாக்கி இருக்கிறது. ஒழுக்கம், தேசியவாதம் போன்ற வாழ்க்கையின் மதிப்பீடுகளை கற்றுக்கொள்ளவும், நாட்டின் எல்லைகளை பாதுகாப்பது என்றால் என்ன என்பது குறித்து அறியவும் சில ஆண்டுகள் ஒவ்வொருவரும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். அந்தவகையில் அக்னிபத் திட்டமும், தொழில் வாழ்க்கையை கட்டமைப்பதை விட ஆழமான அர்த்தம் கொண்டது'' என குறிப்பிட்டுள்ளார்.