ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சமீபத்தில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர் வசிக்கும் பகுதியை சேர்ந்த மக்களின் தலைவர் கதாபாத்திரத்தில் வயதான தோற்றத்தில் நடித்து இருந்தவர் பாலிவுட் நடிகர் மகரந்த தேஷ்பாண்டே. சில வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த புலி முருகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தநிலையில் ஆர்ஆர்ஆர் படம் வெளியான பிறகு படத்தில் அவர் ஒன்றிரண்டு காட்சிகளில் சில நொடிகள் மட்டுமே வந்து சென்றது குறித்து மீடியாவில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தான் மேலும் இரண்டு காட்சிகளில் நடித்திருப்பதாகவும் ஆனால் படத்தின் நீளம் கருதி அவை வெட்டப்பட்டு விட்டதாகவும் கூறிய அவர் ராஜமவுலியின் இயக்கத்தில் ஒரே ஒரு ஷாட்டில் மட்டும் வந்து சென்றால் கூட தனக்கு பெருமை தான் என்றும் கூறியுள்ளார்.
இந்த படத்தில் இவரை நடிக்க வைப்பதற்காக இயக்குனர் ராஜமவுலி இவரை மும்பையிலிருந்து ஹைதராபாத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வரவழைத்தார். அந்த சமயம் முடியை நன்றாக ஒட்ட வெட்டி இருந்த மகரந்த தேஷ்பாண்டேவை பார்த்த ராஜமௌலி அதிர்ச்சியானாராம். ஆனால் மகரந்த தேஷ்பாண்டேவோ, தான் செல்லும் போது கூடவே கையுடன் ஒரு விக்கையும் எடுத்துச் சென்றிருந்தார். ராஜமவுலியின் அலுவலகத்தில் இருந்த ஒப்பனை கலைஞரின் உதவியுடன் அந்த வைகை அணிந்து காட்ட அதன்பிறகு தான் ராஜமவுலிக்கு திருப்தி ஏற்பட்டது என்று கூறியுள்ளார் மகரந்த தேஷ்பாண்டே.