இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? |
பாலிவுட்டின் அடுத்த நட்சத்திர திருமணமாக நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஆலியா பட் திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வரும் இவர்களது திருமணம் பற்றி அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தது.
அந்தத் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் தற்போது வந்துவிட்டது. வரும் ஏப்ரல் 17ம் தேதி இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு நெருக்கமானவர்கள் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ஆலியாவின் தாத்தா ஒருவர் உடல்நலக் குறைவாக இருக்கிறாராம். தனது பேத்தியின் திருமணத்தைப் பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதால் இப்போது திருமணம் நடைபெறுவதாகத் தெரிகிறது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என மும்பையில் உள்ள ஆர்கே ஸ்டுடியோஸில் இத்திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
ஆலியா, ரன்பீர் இருவருமே பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களாக உள்ளார்கள். இருவரும் இணைந்து நடித்துள்ள 'பிரம்மாஸ்திரா' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிந்தது. ஆலியா பட் தெலுங்கில் அறிமுகமான 'ஆர்ஆர்ஆர்' படம் கடந்த மாதக் கடைசியில் வெளியாக தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆலியா, ரன்பீர் இருவரும் தங்களது திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்துவிட்டதாகவும், முதலில் நடத்த உள்ள பேச்சுலர் பார்ட்டிக்கு யார் யாரை அழைக்கலாம் என ஆலோசித்து வருவதாகவும் சொல்கிறார்கள்.