ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
அத்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர்கான், கரீனா கபூர் நடித்துள்ள ‛லால் சிங் சத்தா' படம் ஏப்., 14ல் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. இப்போது ஆக., 11க்கு தள்ளி வைத்துள்ளனர். இதுப்பற்றி அமீர்கான் கூறுகையில், ‛‛ திட்டமிட்டப்படி எங்கள் படம் முடியாததால் ரிலீஸை ஆக., 11க்கு தள்ளி வைத்துள்ளோம். எங்கள் நிலையை புரிந்து கொண்ட பிரபாஸ், சைப் அலிகான், ஓம்ராவத், பூஷண் குமார், டி-சீரிஸ் உள்ளிட்ட ‛ஆதிபுருஷ்' படக்குழுவினருக்கு நன்றி'' என்றார்.
ஓம்ராவத் இயக்கத்தில் ராமாயணத்தை தழுவி பான் இந்தியா படமாக ‛ஆதிபுருஷ்' உருவாகி வருகிறது. இதில் ராமர் வேடத்தில் பிரபாஸ் நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. இந்த படம் ஆக., 11ல் தான் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இப்போது அமீர்கானின் இந்த அறிவிப்பால் ஆதிபுருஷ் படம் தள்ளிப்போகிறது.