தனுஷ் படம் குறித்து பகிர்ந்த கிர்த்தி சனோன் | சர்ச்சை வீடியோ விவகாரம் : பிக்பாஸ் விக்ரமன் வெளியிட்ட தகவல் | 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு கம்பேக் தரும் சங்கீதா | சர்தார் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய கார்த்தி | ரம்பாவின் சொத்து மதிப்பு 2000 கோடி: தயாரிப்பாளர் தாணு தந்த தகவல் | ஸ்ரீதேவியின் 'மாம்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் மகள் குஷி கபூர் | ஹிந்தியில் 'டாப் ஸ்டார்' ஆகும் ராஷ்மிகா மந்தனா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனியை அரங்கேற்றும் லிடியன் நாதஸ்வரம் | நீண்ட நாள் நண்பரை கை பிடிக்கும் அபிநயா | புதிய சீரியலில் மான்யா ஆனந்த் |
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது வழக்கம். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் நாட்டுக்கு 2014ல் தான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது; 1947ல் பெற்றது பிச்சை என்றார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றிய திரைப்படமான, மணிகர்னிகாவில் லட்சுமி பாயாக நடித்தேன். அப்போது 1857ல் நடந்த முதல் இந்திய சுதந்திர போர் பற்றி விரிவாக படித்தேன். ஆங்கிலேயர்களுக்கு எதிராக ராணி லட்சுமி பாய் உட்பட பலர் அந்த போரில் உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர்களை தொடர்ந்து பால கங்காதர திலகர், பகத் சிங், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், வீர சாவர்க்கர் உட்பட பலரும் தியாகங்களை செய்து உள்ளனர்.மஹாத்மா காந்தி நினைத்திருந்தால் பகத் சிங்கை காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் காப்பாற்றவில்லை.
நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்துக்கு மஹாத்மா காந்தி ஆதரவு தெரிவிக்கவில்லை. அவர் ஆதரவு தெரிவித்திருந்தால் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று நேதாஜி பிரதமராகியிருப்பார். நம் நாட்டை ஆங்கிலேயர்கள் முழுமையாக கொள்ளையடித்துவிட்டு, மஹாத்மா காந்தி ஏந்திய பாத்திரத்தில் சுதந்திரம் என்ற பெயரில் பிச்சை தான் போட்டனர்.
எனக்கு தெரிந்தவரை 1947ல் எந்த போரும் நடக்கவில்லை. நடந்திருந்தால் அது பற்றி யாராவது சொல்லட்டும்.தேசத்தை வெள்ளையர்கள் ஏன் பிரித்தனர். 1947ல் சுதந்திரத்தை கொண்டாடுவதற்கு பதில், மக்கள் ஒருவருடன் ஒருவர் அடித்துக் கொண்டது ஏன்? இதற்கான பதில்களை யாராவது சொல்லட்டும். அதன்பின் 1947ல் பெற்ற சுதந்திரத்தை பிச்சை என கூறியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, எனக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதையும் திருப்பி கொடுத்து விடுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுஉள்ளதாவது: ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் தியாகத்தால் தான் 1947ல் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால் இதை பிச்சை என கூறி, நாட்டையே கங்கனா அவமானப்படுத்தியுள்ளார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பத்மஸ்ரீ விருதை, கங்கனா ரணாவத்துக்கு வழங்கி, மத்திய பா.ஜ., அரசு, சுதந்திர தியாகிகளை அவமானப்படுத்தியுள்ளது. பா.ஜ.,வின் போலி தேசியம் வெளிப்பட்டுவிட்டது. கங்கனாவுக்கு வழங்கப்பட்ட அனைத்து தேசிய விருதுகளையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.