‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா |
சென்னை பொண்ணு. செல்ல பெயர் கெமி. அப்பா ராஜ்பிரகாஷ் மகாராஷ்டிரா, அம்மா சுஜாதா கேரளா. நான் முதலில் ஒரு தடகள வீராங்கனை. மாநில அளவில் 100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதலில் வெள்ளி பதக்கம் பெற்றேன். தேசிய போட்டியிலும் சாதனை படைத்துள்ளேன். பயிற்சியாளர், பெற்றோரின் ஆதரவுடன் பின்னர் கூடைப்பந்து வீராங்கனையாக என்னை வளர்த்து கொண்டேன். பாங்காக்கில் நடந்த ஆசிய சாம்பியன் ஷிப் கூடைப்பந்து போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று வெள்ளி பதக்கம் பெற்றுள்ளேன்.
சாதிக்க துாண்டியது
கோயம்புத்துாரில் நடந்த 'மிஸ் தமிழ்நாடு' போட்டியில் பங்கேற்றேன். இந்த போட்டி என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லவில்லை. ஆனால் இந்த போட்டி தளம் தான் வாழ்வில் எப்படி சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை எனக்கு கற்று தந்தது. அதற்கு பிறகு நான் ஒரு மாடலாக வலம் வர பலவித போட்டோ ஷூட்களை எடுத்தேன். தற்போது முன்னணி நிறுவனங்களுக்கு மாடலாகவும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளேன்.
துபாயில் சிலகாலம் பணிபுரிந்தேன். அங்கு எனக்கு பிடித்த உணவு கிடைக்கல. அதனால நானே யுடியூப் மூலம் சமையல் கலையை கற்றேன். இதனால் தனியார் டிவி., சமையல் கலை போட்டிகளில் பங்கேற்றேன். நான் சிறுவயது முதலே உணவு பிரியை. குறிப்பாக மீன் அதிகம் பிடிக்கும். விரும்பி சாப்பிடுவது பிரியாணி. சிறுவயதில் பொருளாதாரத்திற்கு சிரமம் அடைந்தாலும் 16 வது வயதில் இருந்தே கூடைப்பந்து போட்டிகளில் பெற்ற வெற்றி மூலம் கிடைத்த பரிசு தொகையை, என் வீட்டிற்கு கொடுத்து உதவினேன். படிக்கும் போதே பகுதி நேர வேலைவாய்ப்பு மூலம் வருவாய் ஈட்டினேன். இன்னும் கிடைக்கும் வருவாய் மூலம் எதிர்காலத்தில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கு உதவுவேன்.
எனக்கு கார் எளிதாக கிடைக்கவில்லை. டூவீலர் தான் எளிமையாக கிடைத்தது. 10 வயதில், ஸ்கூட்டர் ஓட்ட பழகினேன். என் அம்மாவின் டூவீலரை அவருக்கு தெரியாமல் ஓட்டி அடி வாங்கியுள்ளேன். அப்படி தான் எனக்கு டூவீலர் ஓட்டும் ஆர்வம் வந்தது. டூவீலரில் சுற்றுலா தலங்களுக்கு சென்றால், மனசு 'ரிலாக்ஸ்' ஆக இருக்கும். இதனால் தான் 'டூவீலரை' இன்றைக்கும் காதலிக்கிறேன்.
நடனம் ஆடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். பள்ளியில் 8ம் வகுப்பு வரை எந்த மேடை நிகழ்ச்சி வந்தாலும், விடாமல் பங்கேற்பேன். பரதநாட்டியம் கற்றுக்கொண்டேன். குரல் வளம் தான் எனது பெரிய அடையாளம். என் தனித்திறமையை வெளிக்காட்ட குரல் பெரிதும் உதவியது.
நயன்தாரா, கவின், சசிக்குமார் ஆகியோருடன் திரைப்படங்களில் நடித்துள்ளேன். நடிகைகள் மனோரமா, கோவை சரளா ஆகியோரின் குரல் எனக்கு எளிதில் வருவதால், அவர்களை போன்றே சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் சாதிப்பேன்.
நம்பிக்கை, எவ்வித எதிர்பார்ப்பு இன்றி உழைத்தால் எதிர்பார்க்காத வளர்ச்சியை எட்டிபிடிக்கலாம். அந்த எண்ண ஓட்டத்தில் தான் நான் அன்றாடம் உழைத்து வருகிறேன் என்றார்.