மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விரும்பும் துறையில் சாதிப்பேன் என பிடிவாதமாக இருந்து, அத்துறையில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றி பெறுபவர்கள் சிலரே. திறமை, ஆர்வம் இருந்தால் சினிமாவில் சாதிக்கலாம். அதற்கு நிறம் முக்கியமல்ல என சினிமா, குறும்படங்களில் நடித்து முத்திரை பதித்து வருபவர் திருச்சியை சேர்ந்த சரண்யா ரவிச்சந்திரன். இவர் இதுவரை 130 குறும்படங்கள், 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பலவகையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக பேசியதாவது: திருச்சியில் டிகிரி முடித்து விட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அப்போது டிவி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்தேன். அந்த பணியில் எனது ரோல் மாடலாக திவ்வியதர்ஷினி (டிடி)யை பின்பற்றினேன். அவரை போல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நினைத்து வேலை செய்தேன். அப்போது முதன்முதலாக குறும்படத்தில் நடித்தேன். நடிப்பு நன்றாக உள்ளது என நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தொடர் முயற்சி செய்தேன். அதற்காக நடிப்பு பயிற்சியும் பெற்றேன்.
சினிமா ஆசையில் நடிகர்கள் தேர்விற்கு சென்றேன். 'இறைவி' நான் நடித்த முதல்படம், ஆனால் 'காதலும் கடந்து போகும்' படம் முதலில் வெளிவந்தது. ரெக்க, சீறு, ஜெயில், பைரி உள்ளிட்ட படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன்.
நடிக்க துவங்கி 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. சினிமாவில் நடித்தால் வாழ்க்கை மாறி விடும் என நினைத்தேன். அது என்றாாது ஒருநாள் நடக்கும் என நம்புகிறேன். சினிமா ஒரு பேஷன். இன்னும் நிறைய துாரம் செல்ல வேண்டும். வாழ்க்கையில் சினிமா ஒரு பகுதி தான் என புரிகிறது. என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கும். பல அனுபவத்தை கற்றுக்கொடுத்துள்ளது சினிமா. சிலர் திரைப்படங்களில் என்னை பார்த்து 'நம்மவீட்டு பொண்ணு மாதிரி இருக்கு' என கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது.
சினிமா துறைக்கு செல்கிறேன் என்ற போது அம்மா பயந்தார். அப்பா உற்சாகப்படுத்தினார். சில படங்களில் பாராட்டு பெற்றதை தொடர்ந்து தற்போது அம்மாவும் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்தியன் 2, டீசல், சண்டகாரன், லைன்மேன் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. ரஜினிகாந்த் படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும். இயக்குனர்கள் மணிரத்தினம், வெற்றிமாறன் படங்களில் நடிக்க வேண்டும் என ஆசை உள்ளது.
ஒரு போதும் தாழ்வு மனப்பான்மை கூடாது. தொடர்ந்து புத்தகங்கள் படிக்கிறேன். புத்தகங்கள் வாழ்க்கையை வழிநடத்தும் என்ற நம்பிக்கையுள்ளது என்றார்.