மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பொதுவாக திரையுலகில் ஹீரோயினுக்கு தோழி, ஹீரோவின் தங்கை என்று அறிமுகம் ஆன பிறகு தான் ஹீரோயின் ஆக முடியும். ஆனால் சிலருக்கு ஆரம்பமே ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட வாய்ப்பு பெற்றவர் தேஜூ அஸ்வினி. இவரது இன்ஸ்டாகிராம் போஸ்டுக்காக இளைஞர்கள் காத்திருக்கின்றனர். இவர் கிளாமர் போட்டோ சூட்களை பதிவிட்டதும் இளசுகள் ஹாட்டின்களை தெறிக்க விடுகின்றனர்.
தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக கூறியதாவது : என் பூர்வீகம் ஆந்திரா மாநிலம் விஜயவாடா அருகே ஒரு கிராமம். சென்னைக்கு சிறுவயதிலே குடிபெயர்ந்தோம். அப்பா தெலுங்கு சினிமாவில் இசைக்கலைஞர். நான் பள்ளி, கல்லுாரி படித்தது சென்னையில் தான். எம்.ஏ., படித்துள்ளேன். பள்ளி பருவத்திலிருந்தே நடனம் ஆடுவதை விருப்பமாக வைத்திருந்தேன். பேட்மிட்டன், த்ரோபால், கோகோ, ஹாக்கி விளையாட்டுகளிலும் பங்கேற்று பல வெற்றிகளை பெற்றுள்ளேன்.
2018ல் முதல் முதலாக 'கல்யாண சமையல் சாதம்' வெப்சீரிசில் நடித்தேன். அது கொரோனா காலத்தில் ஹிட்டானது. வைரலும் ஆனேன். ஒவ்வொருவரும் என்னை அடையாளம் காண ஆரம்பித்தனர். அப்பா, அம்மா, அக்கா என எல்லாரும் எனக்கு ஊக்கம் கொடுத்தார்கள். அதன்பிறகு 'அஸ்குமாரோ' ஆல்பம் பாடலில் நடித்தேன். அதுவும் மக்களிடம் வரவேற்பை பெற்றது. அடுத்து திரைப்படத்தில் வாய்ப்பு, அதுவும் ஹீரோயினாக!
குக்குவித் கோமாளி அஸ்வின் நடித்த 'என்ன சொல்ல போகிறாய்' படத்தில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைத்தது. என் முழு திறமையை காட்டினேன். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சானது. 2வது படமாக ஜி.வி.பிரகாஷ் உடன் 'பிளாக் மெயில்' படத்தில் ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கிறேன். அடுத்து 'மூன்றாம் கண்' எனும் படம் முடிந்து இன்னும் வெளிவரவில்லை. இதிலும் நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அதிக வாய்ப்புகள் வருகிறது. நல்ல கதையை தேர்வு செய்து நடிக்கிறேன். எல்லா ஹீரோக்களுடனும் நடிக்க ஆசை. சினிமாவுக்கு நான் புதிது என்பதால் அதிகம் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றார்.