மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வண்ண மயத்தால் மின்னும் உன் பார்வையில் வானவில்லும் கலர் மாறும் என்று கவிஞர்கள் பாட துடிக்கும் 'அழகான தேவதை' நடிகை ஸ்ரீ. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை நம்மிடம் பேசிய போது…
தமிழுக்கு புது வரவா
இல்லை. பக்கா தமிழ் பொண்ணு நான். பிறந்த ஊர் காரைக்குடி. தமிழில் ஏற்கெனவே சில படங்களில் நடித்துள்ளேன். படித்தது அழகப்பா பல்கலையில் பி.எஸ்சி., பரதநாட்டியம். தற்போது சென்னையில் உள்ளேன்.
நடிக்கும் படங்கள்
'சரித்திர பதிவேடு', 'போடுறது தங்கம் ஓட்டுறது சிங்கம்' மற்றும் ஒரு பெயரிடப்படாத தமிழ் சினிமாக்களில் நடித்து வருகிறேன்.
நடிகையாவதற்கு முன்
மாடலிங் எனக்கு சிறு வயது முதல் பிடிக்கும். கல்லுாரி முடித்த பின் சில ஆண்டுகள் மாடலிங் செய்தேன். 'ரேம்ப்ஷோ'விலும் ஒரு ரவுண்ட் வந்தேன். முன்னணி விளம்பர நிறுவனங்களிலும் நடித்துள்ளேன்.
மாடலிங் டூ சினிமா எப்படி
பல மாடலிங்குகள் ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவிற்கு வந்து விட்டனர். நானும் அதுபோல் தான். தானாக வாய்ப்பு கிடைத்தது.
சினிமாவிற்காக உங்களை தயார்படுத்தியது எப்படி
நான் இதுவரை நடித்த படங்களில் பெரிய ஹீரோக்கள் இல்லை. அதனால் அச்சமின்றி நடித்தேன். கண்ணாடி பார்த்து வசனம் பேசி என்னை நானே மெருகேற்றிக்கொள்கிறேன்.
திரையில் ஜொலிக்க திறமை மட்டும் போதுமா
இன்றைய சூழ்நிலையில் திறமை மட்டும் இருந்தால் சினிமா ரேஸில் முந்த முடியாது. அத்துடன் நேரமும் முக்கியம்.
அழகு அவசியமில்லையா
அழகு என்பதை தாண்டி கதைக்கு ஏற்ற பல கேரக்டர்கள் பேசப்பட்டு வருகின்றன. ரொம்ப ரொம்ப அழகான நடிகைகளுக்கு ஏதார்த்தமான கேரக்டர்கள் பெரும் சவாலாகவே இருக்கும்.
சவாலான விஷயம்
தமிழ் பெண்ணாக பிறந்தது தான். என்ன தான் திறமை இருந்தாலும் தமிழ் சினிமாவில் தமிழ் பெண்கள் சாதிப்பது தான் கஷ்டம்.
உங்கள் சினிமா பயண இலக்கு
விடலை ரசிகர்களின் மனங்களை கொள்ளையடிப்பதும், சமூகத்திற்கு தேவையான கதைகளில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடிப்பதும் தான்.
கிளாமர் காட்சிகள் பற்றி
ஆடை குறைப்பு என்பதை கிளாமர் என சொல்லிவிட முடியாது. முகங்களில் 'நான்வெஜ் எக்ஸ்பிரஷன்' கூடாது. படத்திற்கு தேவை என்றால் எல்லைக்கு உட்பட்ட கிளாமர் ஓ.கே., தான்.