மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அண்ணன், தம்பிகள் ஒன்றாக வாழும் கூட்டுக் குடும்பத்தின் கதை. செண்டிமென்டை பிழிந்து பிழிந்து தருவதால் பெண்களுக்கு மிகவும் பிடித்த தொடராக இருக்கிறது. மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆகி வருகிறது.
இதில் மூத்த அண்ணனாக, அதாவது குடும்பத்தை தாங்கி பிடிக்கிற அண்ணனாக சத்தியமூர்த்தி கேரக்டரில் ஸ்டாலின் நடிக்கிறார். அவரது மனைவியாக சுஜிதா நடிக்கிறார். இவர்கள் தவிர வெங்கட் ரங்கநாதன், கவிதா கவுடா, ஹேமா ராஜ்குமார், உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இதுவரை 22 நிமிட எபிசோடாக 550 எபிசோட்கள் ஒளிபரப்பாகி உள்ள நிலையில் ஒரு புதுமையாக நாளையும், நாளை மறுநாளும் (ஏப்ரல் 29,30) இரண்டரை மணி நேர எபிசோடை ஒளிபரப்புகிறார்கள். மாலை 6 முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாகிறது. இதே எபிசோட்தான் 30ம் தேதி மறு ஒளிபரப்பாகிறது.
கதைப்படி முந்தைய பிளாஷ்பேக் இது. அதாவது மூத்த அண்ணன் சத்யமூர்த்தியின் திருமணம் நடந்த கதை. அவருக்கு முதலில் மல்லி என்ற பெண்ணை பேசி முடிக்கிறார்கள். திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பென் இன்னொருவருடன் ஓடிப்போகிறார்.
அந்த திருமணத்திற்கு வந்திருந்த தனம் சத்யமூர்த்தியை திருமணம் செய்து கொள்கிறார். இந்த நிகழ்வைத்தான் திருமண வைபோகம் என்ற பெயரில் இரண்டரை மணி நேர எபிசோடாக ஒளிபரப்புகிறார்கள். இதில் ஸ்டாலின், சுஜிதா தவிர மற்ற தம்பிகள் சிறுவர்களாக வருகிறார்கள். இந்த எபிசோடின் புரமோ மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.