'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
நடிகை ராதிகா நடித்த சித்தி தொடர் சின்னத்திரை வரலாற்றில் மிக முக்கியமான தொடராகும். மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற முதல் சிரியல். அதன்பிறகு அண்ணாமலை, அரசி, வாணி ராணி, செல்லமே, தாமரை, செல்வி என வரிசையாக ராதிகா நடித்த அத்தனை சீரியல்களும் ஹிட்டானது. அவர் நடித்த சந்திரகுமாரி என்ற சரித்திர தொடர் மட்டும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் தான் அவர் சித்தி சீரியலின் 2ம் பாகத்தை துவக்கினார். அதுவும் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது ராதிகா அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கி விட்டார். அவரது கணவர் நடத்தும் சமத்துவ மக்கள் கட்சியின் பெண்கள் பிரிவின் தலைவியாக தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார். வருகிற சட்டசபை தேர்தலிலும் போட்டியிட இருக்கிறார்.
இதனால் சித்தி 2 தொடரில் இருந்து அதிகாரபூர்வமாக விலகி விட்டார். ஏற்கெனவே ராதிகா நடித்து முடித்துள்ள எபிசோட்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் ராதிகா நடித்த கேரக்டரில் அடுத்து நடிக்க இருப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ராதிகா சில நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். சேனல் தரப்பு சில நடிகைகளை குறிப்பிடுகிறது. இதனால் இதுவரை அடுத்த சித்தி பற்றி எந்த முடிவும் ஏற்படவில்லை.
ரம்யா கிருஷ்ணன், மீனா, தேவயானி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் இதுபற்றி விவரங்கள் வெளிவரும் என்று தெரிகிறது.