பிளாஷ்பேக் : 2 தமிழ் படங்களில் மட்டும் நடித்த கன்னட முன்னணி நடிகை | சினிமாவில் ஜெயிக்க 25 ஆண்டுகளாக போராடுகிறேன் : உதயா உருக்கம் | வரிசையாக சரியும் வசூல் நிலவரம் : கூட்டுக்குழு அமைக்கப்படுமா? கூடி பேசுவார்களா? | ஆளே மாறிய அயோத்தி ப்ரீத்தி அஸ்ராணி | ஹீரோயின் இல்லை, அர்த்தமுள்ள கேரக்டரில் பிந்துமாதவி | சென்ட் பிசினஸில் இறங்கிய ராஷ்மிகா மந்தனா | கூலி: அமெரிக்கா டிக்கெட் முன்பதிவு ஆரம்பம் | குடும்பப் படங்களுக்கான வரவேற்பு: மீண்டும் நிரூபிக்குமா இந்த வாரப் படங்கள் | சூர்யாவுக்கு 50, தனுஷிற்கு 42 : சுடச்சுட வெளியாகும் புது அறிவிப்புகள் | 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' - பின்னணி இசை தாமதம்? |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலெட்சுமி தொடர் கடந்த 2020ம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்து கிட்டத்தட்ட 1200 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக கடந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த சீரியெலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே இந்த தொடர் முடிவுக்கு வர இருப்பதாக சின்னத்திரை வட்டாரங்களில் பேச்சு அடிப்பட்டு வருகிறது. அத்துடன் தொடரின் நாயகன் சதீஷும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'பாக்கியலெட்சுமி என்கிற பப்ளிக் எக்ஸாம் முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது. நான் பாஸா பெயிலா? என்பது ரசிகர்கள் உங்கள் கையில் தான் இருக்கிறது. மனதளவிலும் உடலளவிலும் சோர்ந்துவிட்டேன். ஆனாலும், தொடர்ந்து முயற்சிப்பேன்' என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் பாக்கியலெட்சுமி தொடர் முடிவுக்கு வருவது உறுதியாகிவிட்டது.