சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் | ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருந்த அந்நியன் ஹிந்தி ரீமேக் டிராப்பா... | ஸ்ரீ லீலாவை பின்தொடரும் 11 மில்லியன் பேர் : இரண்டே மாதங்களில் 2 மில்லியன் அதிகரிப்பு | சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்த ஜோதிகா | ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் படம் | அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்? | விமல் நடிப்பில் 'ஓம் காளி ஜெய் காளி' | பிரபாஸிற்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போஸ் | மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க மறுத்த ஜீவா | ஆர்.டி.எக்ஸ் இயக்குனருடன் இணைந்த துல்கர் சல்மான் |
பிரபல சின்னத்திரை நடிகரான மிர்ச்சி செந்தில் மதுரை, சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல ஹிட் தொடர்களில் நடித்து சின்னத்திரையில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் நடிகை நித்யா ராமுடன் இணைந்து நடித்து வருகிறார். இவர் அண்மையில் ஆன்லைன் மோசடி ஒன்றில் பணம் ஏமாந்துவிட்டதாக கூறி இன்ஸ்டாகிராமில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், 'எனக்கு தெரிந்த நபர் ஒருவரின் நம்பரிலிருந்து 15000 ரூபாய் பணம் கேட்டு வாட்சப் மெசேஜ் வந்தது. நான் வண்டி ஓட்டிக்கொண்டிருந்ததால் உடனடியாக அவர் சொல்லியிருந்த நம்பருக்கு பணம் அனுப்பிவிட்டேன். கடைசியில் பார்த்தால் அதில் வேறொருவரின் பெயர் இருந்தது. உடனடியாக அந்த நபரை போனில் அழைத்து கேட்டேன். அப்போது தான் அவர் சொன்னார். என் வாட்சப் ஹேக் செய்யப்பட்டுவிட்டது. காலையில் இருந்து 500 நபர்களுக்கு மேல் போன் செய்துவிட்டனர் என்று கூறினார். உடனடியாக சைபர் போலீஸில் புகார் அளித்துள்ளேன். தயவு செய்து மக்களே உஷாராக இருங்கள். யார் பணம் கேட்டாலும் ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்துவிட்டு பணம் அனுப்புங்கள்' என்று கூறியிருக்கிறார்.