2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமான பவுஸி ஹிதாயா டாடா உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்திரா தொடரின் மூலம் அறிமுகமான இவருக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. இந்த தொடரானது கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் பவுஸி மீண்டும் எப்போது ரீ எண்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். தற்போது அவர்களை மகிழ்விக்கும் வகையில் பவுஸி, ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள 'தமிழ்' என்கிற தொடரில் நடிக்கவிருக்கிறார். இந்த தொடரில் பவுஸிக்கு ஜோடியாக சுஜய் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.