'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டவர் பிரதீப் ஆண்டனி. இவருக்கு நிகழ்ச்சியில் மக்களின் பேராதரவு இருந்த நிலையில், சக போட்டியாளர்கள் அவர் மீது சர்ச்சைக்குரிய வகையில் குற்றம்சாட்டி பிக்பாஸால் 'ரெட் கார்ட்' கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை அவர் முற்றிலுமாக மறுத்தார்.
இந்த நிலையில், தன்னுடைய நீண்ட நாள் காதலியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதீப் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது மிகவும் எளிமையான முறையில் சர்ச்சில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை பிரதீப் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பே இந்த பெண்ணை காதலித்து வந்தார் என்றும், அவர் பெயர் பூஜா என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
பிரதீப்- பூஜா தம்பதிகளின் திருமண புகைப்படங்கள் அவருடைய ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றார்கள்.