இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் சீசனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் ஸ்டாலின் முத்து, நிரோஷா, ராஜ்குமார் மனோகரன், வெங்கட் ரெங்கநாதன், வீஜே கதிர், சரண்யா துராடி, ஷாலினி, ஹேமா ராஜ்குமார் என பெரிய பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஜி என்கிற முக்கிய கதபாத்திரத்தில் நடித்து வரும் ஷாலினி சீரியலை விட்டு விலக இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தது. இதனால் ரசிகர்களும் குழப்பமடைந்தனர்.
இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள ஷாலினி, 'நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரிலிருந்து விலகப்போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அது முற்றிலும் பொய். எதற்காக இப்படி வதந்திகள் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.நான் உங்கள் ராஜியாக தொடர்வேன். வதந்திகளை பரப்பாதீர்கள்' என பதிவிட்டுள்ளார்.