அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு |
பிக்பாஸ் சீசன்- 8 நிகழ்ச்சி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளிலேயே சாச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அதோடு இந்த முறை ஆண்கள் அணி, பெண்கள் அணி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் நாளில் நாற்காலி, யார் காலி என்ற தலைப்பில் ஒரு டாஸ்க் நடத்தப்பட்டது. அப்போது அந்த விளையாட்டில் ஓடிய தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகருக்கு காலில் அடிபட்டது. நடக்க முடியாத நிலையில் இருந்த அவரை கை தாங்கலாக போட்டியாளர்கள் அழைத்து சென்று அமர வைத்தார்கள். அதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்னொரு போட்டியாளரான சீரியல் நடிகர் தீபக்கிற்கும் அதே போன்று காலில் வலி ஏற்பட்டுள்ளது. அவரையும் ரவீந்திரனை போலவே 2 சக போட்டியாளர்கள் அழைத்து செல்லும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. ஆனால் அதைப்பார்த்து உண்மையிலேயே அவர்களுக்கு காலில் அடிபட்டதா? இல்லை ஆரம்பத்திலேயே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறதா? என்று நெட்டிசன்கள் பலரும் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.