டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா |
நடிகை கோமதி ப்ரியா ஓவியா தொடரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது 'சிறகடிக்க ஆசை' தொடரின் மூலம் புகழ் உச்சத்தை தொட்டுள்ள அவர் அந்த தொடரை விட்டு விலகியதாக பரவி வரும் செய்தியை பார்த்து ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், உண்மையில் அவர் தமிழில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரிலிருந்து விலகவில்லை. மலையாள மொழியில் சிறகடிக்க ஆசை தொடர் செம்பனீர் பூவே என்கிற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. அதிலும் கோமதி ப்ரியா தான் ஹீரோயினாக நடித்து வந்தார். இந்நிலையில், அவர் செம்பனீர் பூவே தொடரிலிருந்து தவிர்க்க முடியாத காரணத்தால் விலகுவதாக கூறியுள்ளார். அந்த செய்தி தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.