பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
இயக்குனர் திருச்செல்வம் நீண்ட இடைவேளைக்கு பின் ‛எதிர்நீச்சல்' தொடரின் மூலம் அதிரடியாக எண்ட்ரி கொடுத்தார். அந்த தொடருக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாரத வகையில் அந்த சீரியல் நிறைவுபெற்றது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் திருச்செல்வத்திடம் எதிர்நீச்சல் பார்ட் 2 குறித்து அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர்.
அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில், 'எல்லோருமே எதிர்நீச்சல்-2 எதிர்பார்க்கிறார்கள். இனி அதே பெயரை வைப்பதை விட அந்த கதையோடு பொருந்துகிற மாதிரி இன்னொரு கதை உருவாகியிருக்கிறது. அதற்காக நான் பல ஊர்களில் சுற்றி திரிந்து கொண்டிருக்கிறேன். அடுத்த சீரியலுக்கான ஆயத்த பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் எதிர்நீச்சல் வீட்டுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் புது சீரியலில் அந்த வீடும் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வீட்டுக்கு இப்போதும் நான் வாடகை கொடுத்து வருகிறேன்' என்று கூறியுள்ளார். இதனையடுத்து திருச்செல்வத்தின் அடுத்த சீரியலின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.