நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

டிக்-டாக் பிரபலமான தனலெட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்து கடைசி வரை தாக்குப்பிடித்தார். ஆரம்பத்தில் தனலெட்சுமியை பலரும் வெறுத்து ஒதுக்கினாலும், அவர் வெளியேறிய சமயத்தில் பல லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். இதனையடுத்து தனலெட்சுமிக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமென பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது வரை அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தனலெட்சுமி அண்மையில் வெளியிட்டுள்ள பதிவால் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். அதில், தனலெட்சுமியின் அம்மா, அவரது பெயரையோ புகைப்படத்தையோ தனலெட்சுமி எங்கேயும் பயன்படுத்தக் கூடாது என்றும், தனலெட்சுமிக்கும் தனக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து தற்போது எதுவும் சொல்வதற்கில்லை என்றும் தனலெட்சுமி கூறியுள்ளார். இதனால் தனலெட்சுமிக்கும் அம்மாவுக்குமிடையே என்ன பிரச்னை என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.