போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

நடிகைகள் மற்றும் பிரபலமான பெண்கள் பலரும் சமீபகாலங்களில் தங்களுக்கு நடக்கும் பாலியல் ரீதியான கொடுமைகளை வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரை நடிகை அஞ்சலி பாஸ்கரும் தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து ஓப்பனாக பேசியிருக்கிறார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில், 'நான் கஷ்டபட்ட குடும்பத்தில் இருந்து வந்ததால் பேருந்தில் பயணம் செய்வேன். பேருந்தில் சிலர் பெண்களை தவறாக பார்ப்பார்கள் சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவார்கள். ஒருசமயம் ஒரு நடுத்தவர வயது நபர் என்னை தவறான வகையில் உரசினார். நான் உடனே அந்த நபருக்கு ஓங்கி ஒரு குத்துவிட்டு திட்டினேன். அதன்பின் அந்த நபர் இறங்கி சென்றுவிட்டார். ஆனால், அப்போது பேருந்தில் இருந்த ஒரு பெண் கூட எனக்காக ஆதரவு குரல் கொடுக்கவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருந்தது' என்று கூறியிருக்கிறார்.